Updated by admin on
Thursday, October 15, 2020 07:46 PM IST
Chennai:
Puliyur is an ancient and historical place as judged by the Sthalapuranam of the Vengeeswarar and Bharathvajeswarar Temple (Sri Vaaleeswaram) at Puliyur.
Puliyur:
It was previously known as "Kodalambakkam" and a stray verse by Vakeesa Munivar, author of ``Gnanamirtham," a great Saivite religious work, says that his preceptor, Paramananda Munivar, resided in Kodalambakkam. Vakeesa Munivar, who was a contemporary of Rajadhiraja Chozha in the twelfth century, also lived for some time in Thiruvotriyur, which was visited by him along with the king, according to an inscription. Vakeesa Munivar, in his verse, hails his preceptor as "Nar Kodalambakka Adhipan, Thirunerikkavalan, Saiva Sikamani". Hence it is clearly established that Koda(la)mbakkam and the Siva temple there were in existence even 1,000 years ago.
புலியூர்: வேங்கீசுவரர் திருக்கோயில் தலவரலாறு
இந்நாளில் கோடம்பாக்கத்தின் ஒரு பகுதியாகத் திகழும் புலியூர் என்பது, பண்டைக்காலத்தில் கோடலம்பாக்கத்தைத் தன்னுள் அடக்கி கொண்டிருந்த ஒரு பெரும் ஊராகும். இதற்குப் புலியூர் எனும் பெயர் அமைந்ததற்கு உரிய காரணம் பின்வருமாறு:
முன்னொரு காலத்தில் மத்தியந்தினர் என்னும் ஒரு பெரு முனிவர் இருந்தார். அவருக்கு ஒரு தவப்புதல்வர் தோன்றினார். அப்புதல்வரின் பெயர் மழ முனிவர் (இளங்குழந்தையாகிய முனிவர்) என்பது. அவர் தன தந்தையாரிடத்தில் நான்கு வேதம், ஆறு அங்கம், மீமாம்சை, புராணம், தருக்கம், தரும சாத்திரம் முதலிய பலகலைகளையும் கற்றுத்தேர்ந்தார். கல்வியின் பயன் கடவுளை வழிபடுதலும், இறைவன் அருளைப் பெறுதலும் என உணர்ந்தார். ஆதலால் மண்ணுலகில் உள்ள புண்ணியத்தளங்களையெல்லாம் தரிசித்து வணங்கவும், இறைவனைப் பூசித்து வழிபடம் விழைந்தார். பூக்களை பொழுது விடிந்தபின் எடுத்தால் வண்டுகள் தீண்டும். இரவில் எடுக்கச் சென்றால் வழி தெரியாது. கோங்கு மூலரான மரங்களில் மலர் பறிக்கலாமெனில், அவற்றின் அடிமரம் உயர்ந்து வளர்ந்திருத்தலின் கையும் காலும் பனியால் வழுக்கும். ஆதலின், யாது செய்யலாம் என்று பலவாறு எண்ணினார். முடிவில் இறைவனை துதித்துப் போற்றி “அடியேன் நுமக்கு ஏற்ற இனிய எழில் மலர்களைப் பறித்துப் பூசைசெய்வதற்குப் பயன்படும் வகையில் அடியேனுடைய கையும் காலும் புலியைப் போல வலிமையான நகங்களை பெறவும், அவைகளில் காணும் திறன்மிக்க சிறந்த கண்கள் அமையப் பெறவும் திருவருள் சுரந்தருள்க” எனப் பணிந்து வேண்டினார்.
இறைவனும் அதற்கு இசைந்து அவ்வாறே அளித்து அருளினன் . இங்ஙனம் மலர் பறித்துச்சாத்தி இறைவனை வழிபடுதற் பொருட்டுத் தம் கைகால்களில் புலியைப் போன்ற வலிமை மிக்க நகங்களைப் பெற்றதனால் இவருக்கு புலிக்கால் முனிவர் (வியாக்கிரபாதர், வியாக்கிரம் – புலி; பாதம் – கால்) என்னும் காரணப் பெயர் ஏற்படுவதாயிற்று.
புலிக்கால் முனிவர்: (வியாக்கிரபாதர்)
இவ்வாறு புலிக்கால் முனிவர் என்னும் பெயர் பெற்ற (வியாக்கிரப்பதை) முனிவர், பல புண்ணியத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு வந்து, தாம் தில்லை என்னும் சிதம்பரத்திற்குச் சென்று நடராசப் பெருமானை வழிபட்டு அருள் பெறுவதற்கு முன்னர், இங்கு நெடுநாள் தங்கித் தம் பெயரால் ஒரு சிவலிங்கத் திருமேனியை நிறுவி, வழிபட்டு வாழ்ந்து வந்தார். புலிக்கால் முனிவர் தங்கி வழிபடப் பெற்ற ஊராதலின் இதற்குப் புலியூர் என்றும், இங்குள்ள சிவப்பெருமானுக்குப் புலியூரைடையார் என்றும் பெயர்கள் வழங்குவனவாயின.
புலியூர் என்பது, வியாக்கிரபுரி எனவும் வழங்கும். ஆதலின் இங்குள்ள இறைவனின் பெயர் வியாக்கிரபுரீசுவரர் எனவும் வழங்கப்படும். புலிக்கு வேங்கை எனவும் ஒரு பெயர் உண்டாதலின், புலியூருக்கு வேங்கைப்புறம் எனவும், அங்குள்ள இறைவனுக்கு வேங்கீசுவரர் எனவும் பெயர்கள் அமைந்தன. எனவே புலியூரைடையார் – வியாக்கிரபுரீசுவரர் – வேங்கீசுவரர் என்னும் பெயர்கள் அனைத்தும், இங்குள்ள சிவபெருமானுக்குரிய திருப்பெயர்களாகும்.
புலிக்கால் முனிவர், இப்புலியூரில் நெடுங்காலம் தங்கிச் சிவபெருமானை வழிபட்டதன் பயனாகவே, பின்னர்த் தில்லைச் சிதம்பரம் (பெரும்பற்றப்புலியூர்) சென்று, அங்கேயும் தம் பெயரால் திருப்புலீச்சுரம் என்னும் திருக்கோயிலை அமைத்து வழிபட்டு தவம் புரிந்து, தில்லை நடராசப் பெருமானின் திருநடம் கண்டு மகிழும் பேறுபெற்றார். திருப்பாதிரிப்புலியூர், திருப்பெரும் புலியூர் முதலிய தலங்களிலும், வியாக்கிரபாதர் இறைவனை வழிபட்டு மகிழ்ந்தார் என்பது வரலாறு.
பதஞ்சலி முனிவர்:
ஒரு சமயம் திருமால் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருந்தார். அவர் தமது அறிதுயில் (யோகநித்திரை) நீங்கி, அரகர சிவசிவ என்னும் திருப்பெயர்களைச் சொல்லி,கைகளைத் தலைமேல் குவித்து வணங்கி கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகப் பத்மாசனம் என்னும் நிலையில் எழுந்தருளியிருந்தார். அங்ஙனம் அவர் மனமகிழ்ச்சியுடன் எழுந்தருளியிருக்கும் நிலைக்கு காரணம் யாது? எனத் திருமகளும் ஆதிசேடனும் பிரமதேவனும் பணிந்து அன்புடன் வினவினர்.
அதற்கு திருமால் முன்பொரு கால் சிவபெருமான் தருக வன முனிவர்களின் செருக்கை அடக்கித் திருத்துவதற்காகப் பிச்சை தேவர் (பிட்சாடனர்) வடிவன்கொண்டுசென்றதனையும், தாருக வன முனிவர்கள் தம் செருக்கடங்கிப் பணிந்த பொது சிவபெருமான் பயங்கர திருத்தம், சுத்த திருத்தம், அநுக்கிரகத் திருத்தம், சௌக்கியத்திருத்தம், ஆனந்த் திருத்தம் முதலிய திருநடங்களைச் செய்தருளியதனையும் கூறி, அவைகள் எல்லாம் இப்போது எம் நிலையில் எழுந்தன. இதனாலேயே யாம் இப்போது அறிதுயிலில் நின்று எழுந்து மகிந்ழ்ந்திருந்தோம் இரு விவரித்து உரைத்தார்.
அந்நிலையில், சிவபெருமானின் திருநடனங்களின் திறத்தைப் பற்றி திருமால் விவரித்து உறைக்கக் கேட்டு வியந்து மகிழ்ந்த ஆதிசேடன், பக்தியுணர்வால் பரவசப்பட்டு நின்றான். ஆதிசேடனின் பக்திணயர்வைக் கண்டு மகிழ்ந்த திருமால் “இத்தகைய சிறந்த பக்தனாகிய நீ சிவபெருமானின் திருநடனத்தைக் கண்டு களிக்கவிரும்பினையாயின், அவரை நோக்கித் தவம் செயது அருள் பெறுக” என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
அதன்படி ஆதிசேடன், புத்திர பேறு விரும்பித் தவன்கிடந்த அத்திரி முனிவரின் மனைவி ஆகிய அனுசூயை என்பவனின் கைகளில், ஐந்து தலைகள் கொண்ட ஒரு சிறுபாம்பாக வந்து பொருந்தினான். அவள் தன் கைகளில் ஒரு சிறு பாம்பு வந்து கிடத்தல் கண்டு அஞ்சிக் கைகளை உதறினாள். அப்போது அச்சிறு பாம்பாகிய ஆதிசேடன் அவளது கால்களின் மேல் விழுந்தான்.
இங்ஙனம் பாதத்தில் விழுந்தனால், ஆதிசேடன் பதஞ்சலி (பதம் – கால், சளித்தல் – விழுதல்) எனப் பெயர் பெற்று, அத்திரி முனிவருக்கும் அனுசூயா தேவியார்க்கும்மைந்தராக வளர்ந்து வந்தார். இப்பதஞ்சலி முனிவரும் வியாக்கிர பாதரைப் போலவே தில்லைக்கு கூத்துப் பெருமாளின் திருநடனம் காணப் பெருந்தவங்கள் புரிந்துவந்தார்.
என்றபடி தில்லைக் கூத்துப் பெருமானின் திருநடனம் காண விரும்பிய உணர்ச்சி ஒற்றுமையின் காரணமாக, வியாக்கிரபாதரும் பதஞ்சலி முனிவரும் இணையற்ற இனியநண்பர்களாகும் பெருங்கிழமை உரிமை பூண்டனர். இவ்விருவரும் பலதலங்களை ஒருங்கு சேர்த்து வழிபட்டுப் பணிந்து இன்புற்றனர்.
அம்முறையில் கோடலம்பாக்கம் புலியூரில் எழுந்தருளியுள்ள வேங்கீசுவரனையும் பன்னெடுங்காலம் வழிபட்டுப் பணிசெயது போற்றினர்.
இறுதியாக இவர்கள் இருவரும் தில்லைக்குச் சென்று முறையே திருப்புலீச்சுரம் திருஅனந்தேச்சரம் என்னும் திருக்கோயில்களை அமைத்து வழிபட்டுத் தில்லைக் கூத்தப்பெருமானின் திருநடனம் கண்டு மகிழ்ந்து இன்புற்றார்கள் என்பது வரலாறு.
கோடம்பாக்கம் புலியூர் வேங்கீசுவரர் திருக்கோயிலில், இவ்வரலாறுக்குச் சான்றாக, இன்று வியாக்கிரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகிய இரு முனிவர்களின் சிலைகளும்எழுந்தருளச் செய்யப் பெற்றிருத்தல் காணலாம்.
இவைகளால் இந்தத் தலவரலாற்றுக் குறிப்புகள் புலனாகின்றன
Meanwhile, there is another ancient Shiva temple nearby at Puliyur -- the Sri Bharathvajeswarar Temple (Sri Vaaleeswaram), Puliyur, Kodambakkam.
This Shiva temple is in Puliyur, one of the 24 kottams or division of Thondai Mandalam (Puliyur Kottam was the ancient Chennai ). This appears to be a Pallava period Shiva temple over a pre-existing structure. But the temple has been completely altered.
Since Maharishi Bharathvajeswarar installed this Shiva Linga, Moolavar is called Sri Bharatvajeswarar. Vali is said to have worshipped Lord Shiva of this temple and hence it is called ‘Vaaleeswararam’, according to the temple legend. Rama and Sita have also worshipped Lord Shiva at this temple, according to the temple priests.
This temple hosts several inscriptions, some going back to the 13th century, confirming the antiquity and historicity of Puliyur.
No. 80 of 1941-42: An inscription of the 13
th century is found in the northern wall of this Bharathvajeswarar Temple at Puliyur. It belongs to King Pothappi Cholan, a Telugu Cholan. It is in Tamil script. The inscription is in a badly damaged condition, only a small portion of it remains. The inscription is in Tamil. (Chennai Maavetta Kalvettugal)
Another inscription of the 17
th century is found on the floor of the Vinayagar shrine of Bharathvajeswarar Temple. Only a fragment of the inscription is available. The inscription is in Tamil. (Chennai Maavetta Kalvettugal)
79 of 1941-42: Vijayakandagopala (1250-1291 CE) Around 1259-1279 CE: Inscription records that in Puliyur of Puliyar Nadu Thiruvaalisvaram temple) Bharathvajeswarar temple, an inscription approximately dated 1259-1279 CE of ruler Vijayaganda gopala Devar on the western wall, records that two cows were donated for maintenance of Sandhi lamp for the Nayanar of the Thiruvaalisvaram temple in Puliyur of Paliyur Kottam, also known as Kulothungacholan Valanadu, of Jayamkondachola Mandalam. The inscription is dated in Vijayagandagopala’s 29
th regnal year.
The inscription records that one Thillaikoothan Ponnapillai of Verkadu (Tiruverkadu) had made the donation.
The Bharadvajeshwarar or Vaalishwarar temple, so named as sage Bharadwaja and the monkey king Vali are believed to have offered worship at this place. The main sanctum enshrining a Siva Linga belongs to the Chola period, a few Tamil inscriptions found on its north and west walls, datable to the 13th century, testify the antiquity of this monument. Beautiful miniature sculptures of a Linga worshipped by a cow, another worshipped by a snake, and yet one more by Vali adorn the outer walls of this ancient shrine.
Goddess Swarnambika in a standing posture is installed in a separate shrine facing south. Images of Ganesha, Muruga and his consorts, Chandesha, Bhairava, Navagrahas and Hanuman are also enshrined in this temple complex.
An exquisite stone sculpture of a standing Ganesha, datable to the Chola period, originally placed in one of the niches of the main sanctum, is now carefully preserved just outside the entrance of the main shrine.
The details of Puliyur and its temples, along with the inscriptions, establish that the area is truly ancient.
By R Chitra (Director, Chennai 2000 Plus Trust, 9841010821,
chitchit@gmail.com,
chennai2000plus@yahoo.com, rangaraj2022@yahoo.com)